_____________________________________________________________________________________________________________________________________________ 
_____________________________________________________________________________________________________________________________________________ 

பெண்கள் பாதுகாப்பு - துப்பட்டா தற்காப்பு கலை

Saturday, 8 March 2014

print this page
send email
Pengalukkaana tharkappu kalai payirchi, Pengal edhiriyai thaakkivadhu eppadi, eliya tharkappu payirchi

பெண்கள் பாதுகாப்புக்கு - ஒரு கல்... ஒரு துப்பட்டா!

''ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்கள் தங்கள் வசம் உள்ள பேனா, நோட்புக், சாவிக்கொத்து, செல்போன், துப்பட்டா, கை வளையல் இவற்றை வைத்தே எதிரியை திணறடிக்க முடியும்'' என்கிறார் கராத்தே மற்றும் கோபுடோ முறைகளில் தற்காப்பு கலைகளைச் சென்னையில் பெண்களுக்குச் சொல்லித்தரும் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

''இன்றைய பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்குப் படிப்பை தருகிறார்கள். வசதி வாய்ப்பைத் தருகிறார்கள். இதெல்லாம் சரி. எதிர்பாராத சூழ்நிலையில் யாராவது அட்டாக் செய்ய வந்தால், அதைச் சமாளிக்கும் மனோபக்குவத்தை தருகிறார்களா என்றால், அதுதான் இல்லை. தற்காப்பு பாதுகாப்புப் பயிற்சியைக் கண்டிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அதுதான் அவர்களின் உயிரையும் உடமையையும் காக்கும்.

எதிரிக்கும் பயம் உண்டு. உங்களைப் போன்ற பெண்கள் ஒரு நிமிஷம் பயப்படுவதை எதிரி கண்டால், அவன் தாறுமாறாகத் தாக்க ஆரம்பிப்பான். அதுவே, நீங்கள் தற்காப்புப் பயிற்சி தெரிந்தவர்போல் காட்டினால், ஒரு ஸ்டெப் பின்வாங்குவான். அதைப் பயன்படுத்தி அந்த சூழலை விட்டு தப்பிக்க வேண்டியதுதான்! உங்களுடைய கைப்பையில் கருங்கல் ஒன்றை எப்போதும் வைத்திருங்கள். எப்படியும் நீங்கள் துப்பட்டா அணிந்திருப்பீர்கள். நீங்கள் பணிக்கு போகிற வழியில் யாராவது வழிமறித்தால், மின்னல் வேகத்தில் உங்கள் கைப்பையில் இருக்கும் கல்லை எடுத்து துப்பட்டாவில் சுற்றி எதிரியை நோக்கி வீசுங்கள். அதைவிட பெரிய ஆயுதம் வேறு என்ன இருக்க முடியும்? அதேபோல, அவசர சூழ்நிலையைச் சமாளிக்க சாவிக்கொத்தை எடுத்து ஒவ்வொரு விரலிலும் மாட்டிக்கொண்டு ஓங்கி குத்தினால் எதிரியின் முகத்தைக் கிழித்துவிடும். எதுவுமே இல்லாவிட்டால்கூட, ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் மின்னல் வேகத்தில் எதிரியின் கண்களில் குத்தினால், அவன் அம்பேல்தான்.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதிரியை எந்த விதத்தில் தாக்கினாலும் அது தவறாகாது. ஒருவேளை, எதிரி இறந்தே போய்விட்டால்கூட, உங்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. இதை முதலில் புரிந்துகொண்டு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை கற்றுக்கொள்ளுங்கள்'' என்று வழிகாட்டுகிறார்

- விகடன்


Like this FB page =>  GOOD posts in TAMIL   
-------------------------------------------------

Pengal paadhugappukku thubbatta  tharkappu kalai: IT thuraiyil velai paarkkum pengal thannidam kaivasam ulla pena notebook,cellphone, thubbatta, kai valaiyal ivattrai konde edhiriyai thaakki thinaradikka mudiyum engiraar kobudo muraiyil tharkappu kalaigalai chennaiyil pengalukku sollitharum A.S.Krishnamoorthi. 

Pengalukkaana tharkappu kalai payirchi, Pengal edhiriyai thaakkivadhu eppadi, eliya tharkappu payirchi....

Like this FB page =>  GOOD posts in TAMIL