ஐ.நா. தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதால் களங்க போவதில்லை: ராஜபக்ஷே
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை நிராகரிக்கின்றேன். தீர்மானத்திற்கு பதிலாக அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த தீர்மானம் நல்லிணக்கத்தை காயப்படுத்தும் வகையில் அமையும். இந்த தீர்மானம் நல்லிணக்கத்திற்கு வழியமைக்காது. எனினும், நான் இந்த தீர்மானத்தினால் களங்கப் போவதில்லை. ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
United nations theermaanam vetri petriruppadhaal kalanga povadhillaai Rajapakse, Srilanka news | All news feeds in tamil online | latest important news in tamil | Dinamalar, dinathandhi, dinamani, dinakaran,thinaboomi,webthuniya,oneindia news online
.